கண்டி – மஹியங்கனை வீதியில் குருலுபொத்த பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 06 மாத குழந்தையொன்று உயிரிழந்ததுடன், மேலும் 20 பேர் காயமடைந்துள்ளனர்.
நேற்றிரவு கண்டியில் இருந்து மஹியங்கனை நோக்கி பயணித்த தனியார் பேருந்தின் பிரேக் செயலிழந்து மண்மேடு ஒன்றில் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் பிபில பிரதேசத்தை சேர்ந்த 06 மாத குழந்தையே உயிரிழந்துள்ளது.
மேலும், இவ் விபத்தில் சாரதி உட்பட ஏழு ஆண்களும், பத்து பெண்களும், மூன்று சிறுவர்களும் காயமடைந்து மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
யாத்திரை சென்று வீடு திரும்பி கொண்டிருந்த போதே பேருந்து விபத்திற்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.