ஹெரோயின் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரி (பணி நீக்கம் செய்யப்பட்ட) உட்பட இருவரையும் 48 மணிநேரம் தடுத்து வைத்து விசாரிக்க த்தரவிடப்பட்டுள்ளது.
கம்பளை குற்ற விசாரணை பிரிவினர் மாத்தளை நீதவான் நீதிமன்றில் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த சந்தேக நபர்களிடம் இருந்து 3 கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியுடைய 3 கிலோகிராம் 95 கிராம் ஹெரோயின் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பத்தரமுல்லை – தலங்கம பகுதியில் நேற்று துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த நபர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களை கைது செய்யும் நடவடிக்கைகளில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
அத்துடன் பாதுகாப்பு கமராக்களில் இருந்து பெறப்பட்ட காணொளி ஊடாக விசாரணைகள் நடத்தப்படுகின்றன.