NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடையவர்களின் விபரங்கள் வெளியாகின..!

யுக்திய நடவடிக்கையின்போது கைது செய்யப்பட்டு பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து, விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து போதைப்பொருள் கடத்தல்காரர்கள் தொடர்பான பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன.

வெளிநாடுகளிலிருந்து போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்களின் பெயர்கள் மற்றும் இருப்பிடங்கள் தொடர்பான தகவல்களும் வெளியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இத்தகவல்கள் அனைத்தும் நீதிமன்றில் முன்வைக்கப்படவுள்ளதுடன். அதன் பின்னர், சந்தேக நபர்களுக்கு எதிராக சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டு, அவர்களது சொத்துக்கள் அனைத்தும் அரசாங்கத்தினால் பறிமுதல் செய்யப்படும் எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

Share:

Related Articles