NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

போலிச் செய்தி குறித்து கல்வி அமைச்சின் அறிவிப்பு!

அரச பாடசாலைகளில் ஆரம்ப தர மாணவர்களுக்கான மதிய உணவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக வெளியான செய்தி பொய்யானது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

பாடசாலை மதிய உணவுத் திட்டம் நிறுத்தப்பட்டுள்ளதாக கடந்த சில நாட்களாக பல்வேறு தகவல்கள் பரப்பப்பட்டு வருவதாக கல்வி அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கைகள் அனைத்தும் பொய்யானது எனவும் பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் வேலைத்திட்டம் தொடரும் எனவும் திலகா ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

அடுத்த வருடம் வரை அதற்கான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் உள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அரச பாடசாலைகளில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் திட்டம் கடந்த மார்ச் மாதம் முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

Share:

Related Articles