NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மாதா உருவில் வலம் வரும் மர்ம பெண்!

கொழும்பின் புறநகர் பகுதியான கம்பஹா மாவட்டம் கந்தானையில் மர்மப் பெண் ஒருவர் மாதாவை போல் உடுத்திக்கொண்டு நடந்து சென்ற காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் பெரும் கவனம் செலுத்தி வருகின்றன.

இந்த வீடியோவை பலர் “மாதாவின் வருகை“ என பகிர்ந்து வருகின்றனர். இதனால் அக்காணொளி வைரலாகியுள்ளது.

இந்த வீடியோ தொடர்பில் பல கருத்துக்கள் பகிரப்பட்டு வந்தாலும் காணொளியில் வரும் பெண் இலங்கையை சேர்ந்தவர் இல்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், யாரோ ஒருவரின் தூண்டுதலின் பேரில், அவர் இவ்வாறு செயற்படுவதாகவும் விமர்சிக்கப்படுகின்றது.

கடந்த சில வாரங்களாகவே அவலோகத்தீஸ்வரர், போதிசத்துவர்கள் இலங்கையில் அதிகரித்துவரும் வேளையில் தற்போது இந்த மாதாவின் வருகையும் பொதுமக்களை குழப்பத்தில் ஆழ்த்தி வருகின்றது எனலாம்.

இவ்வாறானவர்கள் தொடர்பில் இலங்கை மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் சிலர் சமூக வலைத்தளங்கள் வாயிலாக கருத்துக்களை பகிர்ந்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles