NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மிரெக்ஷஷ் நேஷன் கிண்ணத்தில் இலங்கைக்கு முதல் வெற்றி !

சிங்கபூரில் நடைபெற்றுவரும் மிரெக்ஷஷ் நேஷன் கிண்ண (Mirxes Nations Cup) வலைப்பந்தாட்ட தொடரில் இலங்கை அணி தங்களுடைய முதல் வெற்றியை பதிவுசெய்துள்ளது.

கனடா மற்றும் சிங்கபூர் A அணிகளுக்கு எதிராக தோல்வியை சந்தித்த இலங்கை அணி தங்களுடைய மூன்றாவது போட்டியில் குக் தீவுகள் அணியை எதிர்கொண்டது.

போட்டியின் ஆரம்பம் முதல் ஆதிக்கம் செலுத்திய இலங்கை அணி 63-52 என்ற புள்ளிகள் கணக்கில் இலகுவான வெற்றியை பதிவுசெய்தது.

முதல் காற்பகுதியில் 18-11 என்ற முன்னிலையை இலங்கை அணி பெற்றுக்கொண்டதுடன், இரண்டாவது காற்பகுதியிலும் சிறப்பாக ஆடியது. அதன்படி இரண்டாவது காற்பகுதியில் இலங்கை அணி 13 புள்ளிகளை பெற்றதுடன், 31-26 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலைப்பெற்றது.

இதனைத்தொடர்ந்து இடம்பெற்ற மூன்றாவது காற்பகுதியில் மேலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இலங்கை அணி 12 புள்ளிகள் முன்னிலையுடன் 48-36 என்ற புள்ளிகளை பெற்றதுடன், போட்டியின் நிறைவில் 11 புள்ளிகள் வித்தியாசத்தில் 31-26 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிபெற்றது.

இலங்கை அணி தங்களுடைய அடுத்தப் போட்டியில் பபுவா நியூகினியா அணியை இன்றைய தினம் புதன்கிழமை (25) நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles