NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மீண்டும் IPL தொடருக்கு திரும்பும் மிச்சல் ஸ்டார்க் !

அவுஸ்திரேலிய அணியின் முன்னணி வேகப் பந்துவீச்சாளர் மிச்சல் ஸ்டார்க் அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரில் விளையாட எதிர்பார்த்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

மிச்சல் ஸ்டார்க் இறுதியாக 2015 ஆம் ஆண்டு IPL தொடரில் விளையாடியிருந்த நிலையில், அதன் பின்னர் விளையாடவில்லை. சர்வதேச போட்டிகளை கருத்திற்கொண்டு இவர் IPL தொடரில் விளையாடாமல் இருந்தார்.

இதில் 2018ஆம் ஆண்டு IPL ஏலத்திற்கு விண்ணப்பித்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக வாங்கப்பட்டிருந்தார். எனினும் உபாதை காரணமாக விலகியதுடன், 2019ஆம் ஆண்டு உலகக் கிண்ண தொடர் காரணமாக IPL தொடரை தவிர்த்திருந்தார். அதுமாத்திரமின்றி கடந்த ஆண்டு உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் காரணமாக IPL தொடரில் விளையாடவில்லை.

எனினும் அடுத்த ஆண்டு T20 உலகக் கிண்ணத் தொடர் மேற்கிந்திய தீவுகளில் ஜூன் மாதம் நடைபெறவுள்ள நிலையில், மீண்டும் IPL தொடரில் விளையாடுவதற்கு மிச்சல் ஸ்டார்க் தீர்மானித்துள்ளார்.

இதுதொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள இவர், “நான் அடுத்த ஆண்டு கட்டாயமாக IPL தொடருக்கு திரும்ப எதிர்பார்க்கிறேன். T20 உலகக் கிண்ணத்துக்கு இதுவொரு சிறந்த ஆரம்பமாக இருக்கும். எனவே இந்த IPL தொடரில் அணிகளுக்கு ஆர்வம் இருக்கிறதா என்பதைப் பார்க்க ஒரு நல்ல வாய்ப்பு. எனவே என்னுடைய பெயரை அடுத்த IPL தொடரில் வைப்பதற்கு எதிர்பார்க்கிறேன்” என்றார்

Share:

Related Articles