NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

முச்சக்கர வண்டி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழப்பு..!

கலஹா – புபுரஸ்ஸ பகுதியில் இன்று (13) முச்சக்கர வண்டி ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார்.

வேகக்கட்டுப்பாட்டை இழந்த நிலையில் குறித்த முச்சக்கர வண்டி விபத்துக்குள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விபத்தின் போது முச்சக்கரவண்டியில் மூவர் பயணித்ததாகவும் அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சம்பவத்தில் காயமடைந்த மேலும் இருவர் சிசிக்சைக்காக கண்டி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Related Articles