ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் இந்தியா மற்றும் பாகிஸ்தானி அணிளுக்கு இடையிலான ஒரு போட்டி மழை காரணமாக முடிவின்றி கைவிடப்பட்டுள்ளது.
இந்த போட்டி கண்டி பல்லேகல மைதானத்தில் இடம்பெற்றிருந்தது.
நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடி சகல விக்கெட்டுகளையும் இழந்து 266 ஓட்டங்களை பெற்றிருந்தது.
இதன்படி, பாகிஸ்தான் அணிக்கு 267 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
எனினும் மழை குறுக்கிட்டதான் காரணமாக இந்த போட்டி முடிவின்றி கைவிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, பாகிஸ்தான் அணி ஏ குழுவில் மூன்று புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடித்துள்ளது.