நாட்டில் முதல் காலாண்டில் மாத்திரம் 207 H.I.V தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன், 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
வருடாந்தம் 700 புதிய தொற்றாளர்களாக இனங்காணப்படுகிறார்கள் என சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
H.I.V தொற்றாளர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு 300 சதவீதமாக உயர்வடைந்துள்ளது.
முதல் காலாண்டில் இனங்காணப்பட்ட 207 தொற்றாளர்களில் 15 வயது முதல் 24 வயதுக்குட்பட்ட 23 ஆண்களும், 5 பெண்களும் உள்ளடங்குகின்றனர்.
அத்துடன் முதல் காலாண்டில் H.I.V தொற்றாளர்களில் 13 பேர் உயிரிழந்துள்ளதுடன், நாட்டில் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 5912 பேர் H.I.V தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.
2018 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கையில் H.I.V தொற்றாளர்களின் வீதம் மொத்த சனத்தொகையில் ஒரு மில்லியனுக்கு 0.03 வீதமாக காணப்பட்டதாக விசேட வைத்தியர் சமல் சஞ்ஜீவ சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆனால் தற்போது அந்த வீதம் 0.1 ஆக உயர்வடைந்து, நூற்றுக்கு 300 சதவீதமளவில் தொற்றாளர்களின் வீதம் உயர்வடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதனை அலட்சியப்படுத்த முடியாது என்பதுடன், வருடாந்தம் சுமார் 700 பேர் புதிய தொற்றாளர்களாக அடையாளப்படுத்தப்படுவததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பாலியல் தொழில்களில் ஈடுபடுபவர்களின் மத்தியில் H.I.V தொற்று பரவல் அதிகரித்துள்ளதை அவதானிக்க முடிவதாகவும், மேல்மாகாணத்தில் H.I.V தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகளவில் காணப்படுவதாகவும் விசேட வைத்தியர் சமல் சஞ்ஜீவ மேலும் தெரிவித்துள்ளார்.





