NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

முத்த சர்ச்சைக்குள்ளான ஸ்பெயின் கால்பந்து கூட்டமைப்பின் தலைவர் இராஜினாமா !

மகளிர் உலகக் கிண்ண இறுதிப் பரிசளிப்பு விழாவில் ஸ்பெயின் முன்கள வீராங்கனையான ஜென்னி ஹெர்மோசோவை முத்தமிட்டதற்காக விமர்சனத்துக்கு உள்ளானதைத் தொடர்ந்து, ஸ்பெயின் கால்பந்து கூட்டமைப்பின் தலைவர் லூயிஸ் ரூபியேல்ஸ் இராஜினாமா செய்துள்ளார்.

33 வயதான ஹெர்மோசோ கடந்த செவ்வாய்கிழமையும் இது தொடர்பாக சட்டப்பூர்வ முறைப்பாடு ஒன்றை தாக்கல் செய்தார்.

46 வயதான லூயிஸ் ரூபியேல்ஸ், UEFA நிர்வாகக் குழுவின் துணைத் தலைவர் பதவியையும் இராஜினாமா செய்துள்ளார்.

ஹெர்மோசோவின் சாட்சியத்தைத் தொடர்ந்து ஸ்பெயினின் உயர் நீதிமன்றம் செவ்வாயன்று ரூபியாலஸ் மீது பாலியல் வன்கொடுமை மற்றும் வற்புறுத்தல் குற்றச்சாட்டுகளை பதிவு செய்தது.

Share:

Related Articles