NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் பிரதமர் பதவிக்கு போட்டி?

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் பிரதமர் பதவிக்கு போட்டியிடமாட்டார் என பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தெரிவித்துள்ளார்.

நேற்று (22) செய்தியாளர்களிடம் பேசிய இராஜாங்க அமைச்சர், மஹிந்த ராஜபக்ஷ நாட்டுக்கு தேவையானதை விட அதிகமாக செய்துள்ளார். அவர் இலங்கைக்காக பலவற்றை செய்த தலைவர் என நான் நினைக்கிறேன்.

முன்னாள் ஜனாதிபதி ஓய்வு பெற்று தனது ஓய்வு நேரத்தை அனுபவிக்க வேண்டிய தருணம் தற்போது வந்துள்ளதாக நான் நம்புகிறேன். எதிர்காலத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் கைகோர்க்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தயங்காது என இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் கருத்து வேறுபாடு இருப்பதாக வெளியான செய்திகளையும் அவர் மறுத்துள்ளார்.

Share:

Related Articles