NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

முன்பள்ளி ஆசிரியர்களின் மாதாந்த கொடுப்பனவை அதிகரிக்க தீர்மானம்

பாடசாலை ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் மாதாந்த கொடுப்பனவான 2500 ரூபாவை 5000 ரூபாவாக அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதன்படி, இலங்கையில் உள்ள சுமார் 34,000 முன்பள்ளி ஆசிரியர்களுக்கு எதிர்காலத்தில் இதே கொடுப்பனவு கிடைக்குமென விவசாய மற்றும் தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

அகுனகொலபெலஸ்ஸ பிரதேசத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற முன்பள்ளி ஆசிரியர் அமைப்பின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும்,கடந்த வாரம் இந்த கொடுப்பனவை வழங்க அரசாங்கம் தீர்மானித்ததாகவும் அமைச்சதெரிவித்துள்ளார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles