NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மூன்று அத்தியாவசிய பொருட்களுக்கான விலைகள் குறைப்பு!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

மூன்று அத்தியாவசிய பொருட்களுக்கான விலைகள் குறைக்கப்படுவதாக லங்கா சதொச நிறுவனம் அறிவித்துள்ளது.

அதன்படி, இன்று (30) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலை குறைப்பு மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஒரு கிலோகிராம் வெள்ளை அரிசி 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் இதன் புதிய விலை 165 ரூபாவாகும்.

ஒரு கிலோகிராம் வெள்ளை நாட்டு அரிசி 07 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. இதன் புதிய விலை 168 ரூபாவாகும்.

ஒரு கிலோகிராம் சிவப்பு அரிசி 02 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இதன் புதிய விலை 137 ரூபாவாகும்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles