NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மொரட்டுவை – எகொட உயன பிரதேசத்தில் வாகன விபத்து – 5 பேர் காயம்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

மொரட்டுவை – எகொட உயன பிரதேசத்தில் இன்று (18) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் 5 பேர் காயமடைந்துள்ளனர்.

மொரட்டுவைக்கு குறுக்கே உயன பகுதியில் சக்கரத்தை மாற்றுவதற்காக நிறுத்தப்பட்ட பஸ்ஸூடன் கெப் ரக வாகனமொன்று மோதியதில் விபத்து நேர்ந்துள்ளது.

குறித்த கெப் வாகனம் பேலியகொட மீன் சந்தைக்கு சென்று கொண்டிருந்த நிலையில், விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்நிலையில் விபத்திவ் சிக்கி அதில் பயணித்த 5 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாகவுள்ளமையால், அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக விசாரணைகளை முன்னெடுத்து வரும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சாரதிக்கு நித்திரை ஏற்பட்டதன் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை எகொட உயன பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Share:

Related Articles