NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மோசமான காலநிலை காரணமாக நாட்டின் பல்வேறு வீதிகளுக்குப் பூட்டு – விபரம் உள்ளே

மகாவலி கங்கையின் நீர்மட்டம் உயர்வதால் மன்னம்பிட்டி – கல்லெல்ல வீதி மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அதேவேளை, ஹாலி-எல பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக பதுளை – பண்டாரவளை பிரதான வீதியூடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் மண்சரிவை அகற்றும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பாதை சீரமைக்கப்படும் வரையில் சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு போக்குவரத்து பொலிஸாரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Share:

Related Articles