NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

யாத்திரை சென்ற வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயம்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

பொலன்னறுவை – மட்டக்களப்பு வீதியில் மியன்குளம் பகுதியில் நேற்று (04) இடம்பெற்ற விபத்தில் 11 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது

குறித்த வேனின் டயர் வெடித்து கவிழ்ந்ததில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

காயமடைந்தவர்களில் 3 ஆண்களும், 6 பெண்களும், 2 குழந்தைகளும் உள்ளடடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

Share:

Related Articles