NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

யுவதியை அரிவாளால் தாக்கிய நபர் கைது – CCTV காட்சிகள் பதிவு!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

பிலியந்தலை – பலன்வத்த பிரதேசத்தில் 21 வயது யுவதியை அரிவாளால் கொடூரமாக தாக்கி பலத்த காயத்தை ஏற்படுத்திய நபரை கைது செய்துள்ளதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த யுவதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று (27) குறித்த யுவதி வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்த போது, மறைந்திருந்த சந்தேகநபர் அரிவாளை எடுத்து அவரை கொடூரமாக தாக்கியுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபருக்கும் தாக்கப்பட்ட யுவதியின் தாயாருக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த முரண்பாடு தொடர்பில் நீதிமன்றத்தில் ஏற்கெனவே வழக்கு பதியப்பட்டு இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதேவேளை, தாக்குதலுக்காக பயன்படுத்தப்பட்ட அரிவாள் பொலிஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான விசாரணைகளை பிலியந்தலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் சந்தேக நபர் இளம் பெண்ணை தாக்கும் காட்சி அங்கிருந்த CCTV கெமராவில் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles