NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ரியல்மி 11X 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் !

உலக அளவில் ஆண்ட்ராய்டு போன்களை உற்பத்தி செய்து வரும் சீன தேச எலக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்தி நிறுவனமான ரியல்மி நிறுவனம் அவ்வப்போது தங்கள் நிறுவன பயனர்களுக்காக புதிய அப்டேட்களுடன் கூடிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வது வழக்கம். ஒப்போவின் துணை நிறுவனமாக சந்தையில் களம் கண்டு பின்னர் தனியொரு பிராண்டாக ரியல்மி உருவானது.

தற்போது ரியல்மி 11X 5ஜி போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதோடு ரியல்மி 11 5ஜி ஸ்மார்ட்போனும் அறிமுகமாகியுள்ளது.
ரியல்மி 11X 5ஜி சிறப்பு அம்சங்கள்

6.72 இன்ச் ஃபுல் ஹெச்டி+ AMOLED டிஸ்ப்ளே
ஆண்ட்ராய்டு 13 இயங்குதளம்
ஆக்டா-கோர் 6nm மீடியாடெக் டிமான்சிட்டி 6100+ சிப்செட்
6ஜிபி மற்றும் 8ஜிபி ரேம் என இரண்டு வேரியண்ட்
128ஜிபி ஸ்டோரேஜ்
5,000mAh திறன் கொண்ட பேட்டரி
33 வாட்ஸ் அதிவேக சார்ஜிங் திறன்
64 மெகாபிக்சல் + 2 மெகாபிக்சல் கொண்டுள்ளது பின்பக்க கேமரா
8 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா
யுஎஸ்பி டைப்-சி சார்ஜிங் போர்ட்
இந்த போனின் விலை ரூ.14,999 முதல் தொடங்குகிறது. விலையில் அறிமுக சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது

Share:

Related Articles