NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

வடமாகாணத்திற்கு 24 புதிய பஸ்கள் வழங்கப்பட்டுள்ளன…!

இந்திய அரசாங்கத்தின் கடன் உதவித் திட்டத்தின் கீழ் 24 புதிய பஸ்கள் இலங்கை போக்குவரத்து சபைக்கு கையளிக்கப்பட்டுள்ளன .

யாழ். பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் நேற்று (13) இடம்பெற்ற நிகழ்வின் போதே குறித்த பஸ்கள் கையளிக்கப்பட்டுள்ளன.

இதன்போது, 04 பஸ்கள் வவுனியாவிற்கும், 4 பஸ்கள் கிளிநொச்சிக்கும், 4 பஸ்கள் மன்னாருக்கும், 3 பஸ்கள் முல்லைத்தீவிற்கும், 3 பஸ்கள் யாழ்ப்பாணத்திற்கும், 4 பஸ்கள் பருத்தித்துறைக்கும், 3 பஸ்கள் காரைநகருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.

Share:

Related Articles