NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

விசாகப்பட்டினம் துறைமுகத்தில் தீப்பரவல் – 25 மீன்பிடி படகுகள் தீக்கிரை!

இந்தியா – விசாகப்பட்டினம் துறைமுகத்தில் ஏற்பட்ட தீப்பரவலில் 25 மீன்பிடி படகுகள் வரை தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

படகுகளில் காணப்பட்ட டீசல் மற்றும் எரிவாயு கொள்கலன்கள் மூலம் தீ வேகமாக பரவியதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் அடையாளம் தெரியாதவர்களினால் படகுகளுக்கு தீ வைக்கப்பட்டிருக்கலாம் என கடற்றொழிலாளர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

மேலும் குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் அந்த பகுதி பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Share:

Related Articles