NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

விசேட வைத்தியர்களின் ஓய்வூதிய வயதில் மாற்றம் – நீதிமன்ற தீர்ப்பு வெளியானது!

அரசாங்கத்தில் பணியாற்றும் விசேட வைத்தியர்களின் ஓய்வு பெறும் வயதை 63 ஆக நீடிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (15) உத்தரவிட்டுள்ளது.

நீதிபதி நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் ஏ.மரிக்கார் தலைமையிலான அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியது.

அரச சேவையில் உள்ள விசேட வைத்திய நிபுணர்கள் 60 வயதில் ஓய்வுபெறச் செய்யும் அரசாங்கத்தின் தீர்மானத்தை எதிர்த்து வைத்தியர்கள் குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு மீதான தீர்ப்பை வழங்கும் போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Share:

Related Articles