அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக பாதிக்கப்பட்ட நெல், சோளம், உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம், சோயாபீன் மற்றும் மிளகாய் பயிர்ச்செய்கையை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு நட்டஈடாக ஹெக்டேயருக்கு ரூ. 100, 000 இழப்பீடு வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ இதனைத் தெரிவித்துள்ளார்.
 
				 
															






