NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

வீராங்கனைக்கு முத்தம் கொடுத்த FIFA தலைவர் பதவி விலகல்!

மகளிர் உலக கால்பந்து போட்டி சமீபத்தில் அவுஸ்திரேலியா – நியூசிலாந்தில் நடந்தது.

இதில் ஸ்பெயின் முதல் முறையாக சம்பியன் வென்றது.

மைதானத்தில் வெற்றி கொண்டாட்டத்தின் போது ஸ்பெயின் வீராங்கனைகளை அந்நாட்டு கால்பந்து சம்மேளன தலைவர் லூயிஸ் ரூபியேல்ஸ் கட்டியணைத்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது ஸ்பெயின் வீராங்கனை ஜென்னி ஹெர்மோசோவை கட்டியணைத்து உதட்டில் முத்தம் கொடுத்தார்.

இந்த வீடியோ சமூக வலைதளதங்களில் வைரலானது. லூயிஸ் ரூபியேல்சின் இந்த செயலுக்கு கண்டனங்கள் குவிந்தன. இதையடுத்து அவர் மன்னிப்பு கேட்டார். அவர் கூறும்போதுஇ நான் கண்டிப்பாக தவறு செய்து விட்டேன். இதை நான் ஒப்புக்கொள்ள வேண்டும் என்றார்.

இந்த சம்பவம் தொடர்பாக சர்வதேச கால்பந்து சம்மேளன (FIFA) ஒழுங்கு நடவடிக்கையை தொடங்கி உள்ளது. மேலும் லூயிஸ் ரூபியேல்ஸ் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று ஸ்யெின் நாட்டு அமைச்சர்கள் வலியுறுத்தினர்.

இந்நிலையில் லூயிஸ் ரூபியேல்ஸ் தனது ஸ்பெயின் கால்பந்து சம்மேளன தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். FIFA ஒழுங்கு நடவடிக்கையை தொடங்கியுள்ளதால் அவர் பதவி விலகி உள்ளார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles