(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
மழையுடன் கூடிய காலநிலை நிலவிவருவதால், வயிற்றுப்போக்கு பிரச்சினை அதிகரிக்கும் நிலை காணப்படுவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக வெசாக் தானசாலைகளை நடத்தும் போது சுத்தமான நீரைப் பயன்படுத்துமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
வெசாக் தானசாலைகள் குறித்து ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.