வெசாக் வாரத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள இறைச்சி விற்பனை நிலையங்கள், சூதாட்ட விடுதிகள், கெசினோக்கள், களியாட்ட விடுதிகள் மற்றும் மதுபான விற்பனை நிலையங்கள் மூடப்படுவதாக அரசாங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
மே மாதம் 10 ஆம் திகதி முதல் மே 16 ஆம் திகதி வரை வெசாக் வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, மே மாதம் 12, 13 மற்றும் 14 ஆகிய மூன்று நாட்களுக்கு நாடு முழுவதும் உள்ள விலங்குகளை இறைச்சிக்காக விலங்குகளை கொலை செய்யும் இடங்கள், இறைச்சி விற்பனை நிலையங்கள் மற்றும் மதுபான விற்பனை நிலையங்கள் மூடப்படவுள்ளன.
மேலும், பல்பொருள் அங்காடிகளில் இறைச்சி விற்பனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளதுடன், சூதாட்ட விடுதிகள், கெசினோக்கள், மற்றும் களியாட்ட விடுதிகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கம் அறிவித்துள்ளது.