NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

வெப்பத்தால் ஏற்படும் மரண எண்ணிக்கை நான்கு மடங்காக அதிகரிப்பு

காலநிலை மாற்றத்தால் இந்த நூற்றாண்டின் இறுதியில் வெப்பத்தால் ஏற்படும் பலி எண்ணிக்கை 370 வீதம் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘மனிதனால் உருவாக்கப்பட்ட காலநிலை மாற்றத்தால், உலக மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

வெப்பநிலை அதிகரிப்பை 1.5 டிகிரி செல்சியஸாகக் கட்டுப்படுத்துவது அவசியமாகிறது. இல்லாவிட்டால் கடுமையான விளைவுகள் ஏற்படும்.

தொழில்துறை உற்பத்தியை குறைக்க வேண்டும். வினாடிக்கு 1,337 டன் கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றப்படுகிறது. கார்பன் வெளியேற்றத்தை குறைக்க வேண்டும்.

கடந்த 1991-2000ம் ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது 2013-2022ம் ஆண்டுகளில் 65 வயதுக்கு மேற்பட்டவர்களில் பலர் வெப்பம் தொடர்பான பிரச்சினைகளால் 85 வீதம் பேர் உயிரிழந்துள்ளனர்.

ஒரு ஆண்டில் 5 மடங்கு அளவிற்கு மேல் வெப்பத்தால் இறப்புகள் நிகழ வாய்ப்புள்ளது.

கடந்த 1981 முதல் 2010ம் ஆண்டு வரை ஒப்பிடும்போது, கடந்த 2021ம் ஆண்டில் மட்டும் 122 நாடுகளில் 127 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கடுமையான உணவு நெருக்கடியால் பாதிக்கப்பட்டனர்.

மாறிவரும் காலநிலை மாற்றங்களால் கொடிய தொற்று நோய் பரவலும் அதிகரித்து வருகிறது.

வெப்பமயமாதலால் கடலில் விப்ரியோ பாக்டீரியாவின் பரவல் அதிகரித்துள்ளது. இதன்மூலம் நோய் பரவல் ஏற்படுகிறது.

உலகின் வெப்பநிலை, கடந்த 2022ல் 1.1 டிகிரி செல்சியஸ் கூடியது. இந்த நூற்றாண்டின் இறுதியில், வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் அளவிற்கு அதிகரிக்க வாய்ப்புள்ளது.

கடுமையான வெப்பத்தால் ஏற்படும் இறப்புகள் 370 சதவீதம் அளவிற்கு அதிகரிக்க வாய்ப்புள்ளது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Share:

Related Articles