NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

வெற்றிகரமாக சந்திராயன் – 3ஐ விண்ணில் ஏவியது இஸ்ரோ!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

சந்திரயான் – 3 விண்கலத்தை இந்தியாவின் இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்; ஸ்ரீஹரிகோட்டாவில் இன்று (14) வெற்றிகரமாக செலுத்தியது.

விண்கலம் ஏவுதலுக்கான 25.30 மணி நேர கவுன்ட் – டவுன் நேற்று (13) மதியம் ஒரு மணிக்கு தொடங்கியது. தொடர்ந்து, எரிபொருள் நிரப்புதல் உள்ளிட்ட இறுதிக்கட்ட பணிகளில் விஞ்ஞானிகள் ஈடுபட்டனர்.

இன்று காலை சந்திரயான் – 3 விண்கலத்தில் திரவ எரிபொருள் நிரப்பும் பணிகள் நடந்தன. சில மணி நேரங்களில் இந்த பணி வெற்றிகரமாக நிறைவு பெற்றது. கிரையோஜெனிக் எந்திரத்தில் அடுக்கடுக்காக திரவ எரிபொருள் நிரப்பப்பட்டது.

இதையடுத்து இறுதி கட்ட ஆய்வுகள் நடந்தன. அதில் சந்திரயான் – 3இல் உள்ள அனைத்து கருவிகளும் திருப்திகரமாக இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதுபோல சந்திரயா – 3 விண்கலத்தை சுமந்து செல்லும் ரொக்கெட் பாகங்களும் திட்டமிட்டபடி இயங்கி வருவது உறுதிப்படுத்தப்பட்டது.

இதையடுத்து திட்டமிட்டபடி சென்னை அருகே ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ விண்வெளி ஆய்வு மையத்தின் 2ஆவது தளத்தில் இருந்து இன்று பிற்பகல் சந்திரயான் – 3 வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளது. இதன் மூலம் சந்திரயான் – 3 விண்கலம் தனது பயணத்தை திட்டமிட்டபடி இன்று தொடங்கியது.

Share:

Related Articles