NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

வெளிகம தனியார் பாடசாலை ஒன்றில் தீ விபத்து…!

வெலிகம பிரதேசத்தில் உள்ள தனியார் மகளிர் பாடசாலை ஒன்றில் தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளது.

பாடசாலையின் விடுதி அமைந்துள்ள நான்கு மாடி கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் இவ்வாறு தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

மாத்தறை தீயணைப்பு பிரிவினர், வெலிகம பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து தீயை அணைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தனியார் மகளிர் பாடசாலையில் கடந்த மார்ச் 3ம் திகதியும் தீ விபத்து ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles