NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு அழைப்பு!

எந்தவித அச்சமும் இன்றி இலங்கைக்கு சுற்றுலாப் பயணம் மேற்கொள்ளுமாறு வௌிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பிரிவு பகிரங்க அழைப்பு விடுத்துள்ளது.

இலங்கையில், சுற்றுலாப் பயணிகளுக்கு அதிகபட்ச பாதுகாப்பை வழங்க பாதுகாப்பு அமைச்சினால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்தப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

தற்போது இலங்கையில் தங்கியுள்ள சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை சுற்றுலா ஊக்குவிப்பு பிரிவு குறிப்பிட்டுள்ளது.

அறுகம்பை பகுதியை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்படலாம் என்ற நம்பத்தகுந்த தகவல் கிடைத்துள்ளதாக கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் நேற்று(23) முற்பகல் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles