NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

வேற்று கிரக உயிர்கள் பற்றி நாசா அறிக்கை !

The National Aeronautics and Space Administration அதாவது நாசா பறக்கும் தட்டுகள் மற்றும் வேற்று கிரகவாசிகள் பற்றிய சிறப்புத் தகவலை வெளியிட்டுள்ளது.

சமீபத்தில் மெக்சிகோ நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வேற்று கிரகவாசிகள் என சந்தேகிக்கப்படும் உடல்கள் குறித்து உலகளவில் பாரியளவிலான விவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில் நாசா இதனைத் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் நாசா பல தசாப்தங்களாக பறக்கும் தட்டுகள் பற்றிய தகவல்களை சேகரித்து வருகிறது. இதற்கு அமெரிக்க விமானப் படையும் ஆதரவு அளித்து வருகிறது.

நாசா ‘பறக்கும் தட்டுகளை’ ‘அடையாளம் தெரியாத வானப் பொருள்கள்’ என்று அழைக்கிறது. இந்த ‘விஷயங்கள்’ விளக்க முடியாத மர்மமான நிகழ்வு என்று நாசா விஞ்ஞானிகள் ஒப்புக்கொண்டுள்ளனர்.

நாசா தனது சமீபத்திய அறிக்கையில், ‘அடையாளம் காணப்படாத வானப் பொருட்கள், வேற்றுகிரகவாசிககளை பறக்கும் தட்டுகள் என்று கூற முடியாது என்று கூறுகிறது. அது தவிர மெக்சிகோ பாராளுமன்றத்தில் வழங்கப்பட்ட அசாதாரண உடல்கள் குறித்து நாசா எதுவும் இதுவரையில் கருத்துக்களை முன்வைக்கவில்லை.

‘வேற்று கிரகவாசிகள் உண்மையானவர்கள் என்றோ, வேற்று கிரகவாசிகள் போலியானது என்றோ கூற முடியாது. இதுவரை, அடையாளம் காணப்படாத வானப் பொருட்கள் பிரபஞ்சத்தின் தொலைதூரத்தில் உள்ள வேற்று கிரக உயிரினங்களின் விண்கலங்கள் என்று சொல்வதற்கு வலுவான அறிவியல் சான்றுகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த விஷயங்கள் தொடர்ந்து விசாரிக்கப்பட வேண்டும்’ என நாசா விஞ்ஞானிகள் தங்களது 36 பக்க அறிக்கையின் முடிவில் வேற்று கிரக உயிர்கள் உள்ளதா இல்லையா என்பது குறித்து விளக்கமளித்துள்ளனர்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles