NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

வேலைக்குச் செல்ல வேண்டாம் எனக்கூறிய கணவன் – கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய மனைவி!

இந்தியா – மதுரையில் வசித்துவரும் தம்பதியினரில் வேலைக்கு செல்ல வேண்டாமென கூறிய கணவர் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய மனைவி தொடர்பில் விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளது.

மனைவி வேலைக்குச் செல்வதில் கணவருக்கு துளியும் விருப்பமில்லாததால் அவரை வேலைக்கு செல்ல வேண்டாம் என கூறி வந்துள்ளார். ஆனால்இ அவர் அதை பொருட்படுத்தாமல் தனது வேலையை தொடர்ந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இதுதொடர்பில் இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த மனைவி, தனது கணவர் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியுள்ளார்.

இதனால் உடல் முழுவதும் தீக்காயமடைந்து, அருகிலுள்ளவர்களினால் மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் குறித்த பெண் மீது வழக்குத் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Share:

Related Articles