NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஹம்பாந்தோட்டையில் முதலீடு செய்யும் சினோபெக் நிறுவனம்!

ஹம்பாந்தோட்டையில் நிர்மாணிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் சினோபெக் நிறுவனம் முதலீடு செய்யவுள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

சினோபெக் எரிபொருள் விநியோக நிறுவனம், சினோபெக் எரிபொருள் சுத்திகரிப்பு நிறுவனத்தின் பிரதிநிதிகள் குழு மற்றும் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர ஆகியோருக்கிடையிலான கலந்துரையாடல் நேற்று இடம்பெற்றுள்ளது.

இந்தக் கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கும் போதே அமைச்சர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.அத்துடன், இதற்கான திட்ட முன்மொழிவு அடுத்த வாரம் முன்வைக்கப்படுமென மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, நாடளாவிய ரீதியில் இம்மாத இறுதிக்குள் தமது விநியோக செயற்பாடுகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக சினோபெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Share:

Related Articles