ஹிங்குராங்கொடை விமான நிலையத்தை சர்வதேச சிவில் விமான நிலையமாக அபிவிருத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
இந்த விமான நிலையம் அபிவிருத்தி செய்யப்பட்டவுடன் மத்தள விமான நிலையத்தை காட்டிலும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவருவதன் மூலம் அதிக வருமானத்தை ஈட்ட முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.