NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

10 நாட்களாக வருகைதராத வைத்தியர்களால் உயிராபத்தை எதிர்கொண்டுள்ள சிறுவர்கள்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

மூன்று வைத்தியர்கள் 10 நாட்களாக கடமையை புறக்கணித்ததன் காரணமாக கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் 8ஆம் இலக்க வார்ட்டில் உள்ள சிறுவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் ஜி. விஜேசூரிய தெரிவித்துள்ளார்.

இதன்காரணமாக குறித்த வார்ட்டுக்கு குழந்தைகளை சேர்க்க தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த மூன்று வைத்தியர்கள் இல்லாதமை தொடர்பில் வைத்தியசாலை அதிகாரிகள் சுகாதார அமைச்சுக்கு தெரியப்படுத்திய போதிலும் குறித்த மூன்று வைத்தியர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும், தற்போது அந்த வார்டில் சிகிச்சைகள் பயிற்சி மருத்துவர்களால் மேற்கொள்ளப்படுவதாகவும், இது குழந்தைகளின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் குற்றம்சாட்டியுள்ளது.

வைத்தியசாலையின் எட்டாவது வார்டில் சுமார் ஐம்பது குழந்தைகள் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles