NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

11 மாணவிகள் துஷ்பிரயோகம் – ஆங்கில ஆசிரியர் கைது!

குருநாகல் நகரிலுள்ள பிரதான கலப்புப் பாடசாலையொன்றில் ஐந்தாம் ஆண்டில் கல்வி கற்கும் பதினொரு மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் ஆங்கில ஆசிரியர் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொத்துஹெர பிரதேசத்தில் வசிக்கும் இரண்டு பிள்ளைகளின் தந்தையான ஐம்பத்தைந்து வயதுடைய குறித்த ஆசிரியர் தொடர்பில் பெற்றோர்கள் பொலிஸில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் தனது பாடத்தை கற்பிக்கும் போது வகுப்பில் உள்ள மாணவிகளுக்கு விஷேட கவனம் செலுத்தி மாணவிகளின் உடலை தொட்டு, அழுத்தி, அந்தரங்க பகுதிகளை தொட்டு துஷ்பிரயோகம் செய்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த தினசரி துஷ்பிரயோகம் குறித்து பாதிக்கப்பட்ட மாணவிகள் பெற்றோரிடம் தெரிவித்ததையடுத்து, அவர்கள் இது தொடர்பாக குருநாகல் பொலிஸ் தலைமையகத்தின் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தில் முறைப்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles