NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

12 வயது சிறுவனை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய 16 வயது சிறுவன்…!

12 வயது சிறுவனை கடலுக்குள் இழுத்துச் சென்று பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இளைஞனும் அதற்கு உதவிய 16 வயது சிறுவனும் நேற்று அங்குலான பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தாம் கடற்கரையில் இருந்தபோது சந்தேகநபர்கள் இருவரும் தன்னை தண்ணீருக்குள் இழுத்துச் சென்று ,துஸ்பிரயோகம் செய்ததாக பாதிக்கப்பட்டவர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

அந்த இளைஞன் தன்னை துஸ்பிரயோகம் செய்த போது மற்றைய சிறுவன் அதை பார்த்து இரசித்ததாக பாதிக்கப்பட்ட சிறுவன் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதனையடுத்து பாதிக்கப்பட்டவரின் பெற்றோரிடம் இருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles