NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

14 சதவீதத்தால் HIV தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு !

2024 ஆம் ஆண்டின் கடந்த 3 மாதங்களில் இலங்கையில் 695 புதிய AIDS தொற்று நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய STD மற்றும் AIDS கட்டுப்பாட்டு திட்டத்தின் பணிப்பாளர் சமூக சுகாதார நிபுணர் ஜானகி விதானராச்சி தெரிவித்துள்ளார்.

இது முன்னைய 2023ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 14% அதிகரிப்பு ஆகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் ஒவ்வொரு மாவட்டத்திலும் தொற்றுக்குள்ளானவர்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும், கொழும்பில் நடத்தப்பட்ட மருத்துவ மனைகளில் கண்டறியப்பட்ட HIV STD நோயாளிகளின் எண்ணிக்கை நாற்பது சதவீதமாக அதிகரித்துள்ளதாகவும் சுகாதாரத் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Share:

Related Articles