NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

140 ஆண்டுகளுக்கு பிறகு ஹொங்கொங்கில் கனமழை!

ஹொங்கொங்கில் பெய்துவரும் இடைவிடாத மழை காரணமாக அங்கு பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

ஒரேநாள் இரவில் 200 மில்லி மீற்றர் மழை கொட்டி தீர்த்துள்ளது.

இதனால் மெட்ரோ புகையிரத சேவைகள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளன.

இதனை தொடர்ந்து, தண்ணீரை வெளியேற்றும் பணி நடந்து வருகிறது.

வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் தவித்து வருகின்றனர்.

வாகன போக்குவரத்தும் பாதிப்படைந்துள்ள நிலையில், பாடசாலைகள், வணிக வளாகங்கள் மூடப்பட்டு உள்ளன. ஊழியர்கள் வீட்டில் இருந்த படி பணி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

140 ஆண்டுகளுக்கு பிறகு ஹொங்காங்கில் இடைவிடாமல் கனமழை பெய்து உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. வீடுகளை விட்டு வெளியில் யாரும் வர வேண்டாம் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Share:

Related Articles