தற்போதைய பாராளுமன்றத்தில் உள்ள 150 இற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் வெளியேற வேண்டியவர்கள் எனவும், தான் வெற்றிபெற்று ஒன்றரை மாதங்களுக்குள் பாராளுமன்றத் தேர்தல் நடத்தப்படும் எனவும் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
பன்னல பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எவ்வளவு கூறினாலும், சஜித் பிரேமதாச எத்தனை பொய்க் கதைகள் கூறினாலும் பரவாயில்லை. எமது பயணத்தை இனி தோற்கடிக்க முடியாது என குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், ரணில் சஜித், நீங்கள் அறிய மிகவும் தாமதமாகிவிட்டீர்கள். விரைவில் பாராளுமன்றத்தை கலைப்போம். இந்த பாராளுமன்றத்தில் அநாகரீகமாக அலறல். கொலை செய்து சிறை சென்ற குற்றவாளிகள், கப்பம் வாங்கி சிறை சென்ற குற்றவாளிகளின் புகலிடமாக மாறியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, அப்படிப்பட்ட பாராளுமன்றம் தேவையா? இன்னும் ஒன்றரை மாதங்களில் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது, இந்த பாராளுமன்றத்தில் உள்ள 150 இற்கும் மேற்பட்டோர் வீட்டுக்கு அனுப்பப்படுவர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.