NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

16 மாணவிகளை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய ஆசிரியர்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

களுத்துறையில் கணிதம் கற்பிக்கும் வகுப்பு ஆசிரியர் ஒருவர் 16 மாணவிகளை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியுள்ளதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அந்த மாணவர்களில் களுத்துறை பிரதேசத்தில் உள்ள பொலிஸ் நிலைய அதிகாரி ஒருவரின் மகள்களும் அடங்குவதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வகுப்பறையில் மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியர், களுத்துறை லாகோஸ் வத்தை பகுதியில் உள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று காரில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததையும், அத்துடன் அவற்றை அலைபேசியில் காணொளிகளாக பதிவு செய்துள்ளதாகவும் பொலிஸார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதுதவிர, ஸூம் ஒன்லைன் மூலம் நடத்தும் வகுப்புகள் என்ற போர்வையில், பெற்றோர் வீட்டில் இல்லாதபோது, மாணவிகளின் ஆடைகளை கழற்றுமாறு அறிவுறுத்தப்பட்டதாகவும், அந்த காட்சிகளும் பதிவு செய்யப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், தனது மடிக்கணினியில் சிறுமிகளின் அனைத்து நிர்வாணப் படங்களையும் சேமித்து வைத்திருந்ததையடுத்து, அவரது மனைவி பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோருக்குத் தெரிவித்ததை அடுத்து, ஆசிரியரின் இழிவான செயல் வெளிச்சத்திற்கு வந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளது.

அதேநேரம் குறித்த ஆசிரியர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Share:

Related Articles