2024 ஆம் நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை தயாரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அதற்கமையஇ சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள 2024 ஆம் நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூல வரைவுக்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், அதனை பாராளுமன்ற அங்கீகாரத்துக்காக சமர்ப்பிப்பதற்கும் நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.