NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

2024 அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் – மீண்டும் போட்டியிடப் போவதாக ஜோ பைடன் அறிவிப்பு!

அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிடப் போவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நடக்கவுள்ளது. இதில் குடியரசு கட்சியின் சார்பில் முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் மீண்டும் போட்டியிடுவதுடன், தேர்தலுக்கான பிரசாரத்தை அவர் முன்கூட்டியே தொடங்கிவிட்டார்.

அதேவேளை, குடியரசு கட்சியின் சார்பில் டிரம்புக்கு போட்டியாக இந்திய வம்சாவளியை சேர்ந்த நிக்கிஹாலே மற்றும் விவேக் ராமசாமி ஆகியோர் களமிறங்கியுள்ளனர்.

இதனிடையே ஜனநாயக கட்சியின் சார்பில் தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் மீண்டும் போட்டியிடுவார் என தகவல்கள் பரவி வந்தன. அதற்கமைய ஜோ பைடனும் மீண்டும் போட்டியிடுவதற்கான விருப்பத்தை தெரிவித்திருந்தார். எனினும் அதை அவர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்காமல் இருந்து வந்தார்.

இந்நிலையில் 2024 ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிடுவதை ஜோ பைடன் நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தார். இவரை தொடர்ந்து துணை ஜனாதிபதியான இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் மீண்டும் அந்த பதவிக்கு போட்டியிடுவதாக அறிவித்திருக்கிறார்.

Share:

Related Articles