NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

2025 ஆம் ஆண்டு சாதாரண தரப் பரீட்சை (O/L )மாணவர்களுக்கான விசேட அறிவிப்பு..!

2025 ஆம் ஆண்டு சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும், தேசிய அடையாள அட்டை தகவல் உறுதிப்படுத்தல் கடிதங்கள் இன்னும் கிடைக்காத பரீட்சார்த்திகள் இன்று அந்தக் கடிதங்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, தேசிய அடையாள அட்டை தகவல் உறுதிப்படுத்தல் கடிதங்களை வழங்குவதற்காக மட்டுமே இன்று காலை 8.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை அலுவலகம் திறந்திருக்கும் என்று அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், ஆட்பதிவுத் திணைக்களத்தின் http://www.drp.gov.lk என்ற அதிகாரப்பூர்வ இணையத்தளத்திற்கு பிரவேசிப்பதன் மூலம் தொடர்புடைய கடிதத்தை பதிவிறக்கம் செய்யும் வசதி உள்ளதாகவும் ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles