2025 ஜனவரியில் 05 வெள்ளிக்கிழமைகள் இருப்பது உண்மையென்றாலும், இது 823 ஆண்டுகளுக்குப் பிறகு மாத்திரமே நிகழும் என்று கூறப்படும் தகவல் முற்றிலும் தவறானதாகும்.
ஒரு மாதத்தில் 05 வெள்ளிக்கிழமைகள் இடம்பெறுவதானது பொதுவான நிகழ்வாகும், இது சுழற்சி அடிப்படையில் சில வருடங்களுக்குள் மீண்டும் நிகழக் கூடியதாகும்.
அதாவது, 2025 ஜனவரி மாதத்திற்கு முன்பு, 2016, 2009, 1999, 1993, 1988, 1977, மற்றும் 1971 ஆகிய ஆண்டுகளில் ஜனவரி மாதத்தில் 05 வெள்ளிக்கிழமைகள் இருந்தன.
அதனால், 823 ஆண்டுகளுக்குப் பிறகு மட்டுமே இது நிகழும் என்று வெளியான தகவல் தவறாகும். வார கால சுழற்சியின் அடிப்படையில், இது 5-11 ஆண்டுகளுக்குள் மீண்டும் நிகழவதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன.