2032 பிரிஸ்பேன் ஒலிம்பிக்கிற்கான பள்ளி அளவிலான விளையாட்டு வீரர்களின் திறன்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட பொது-தனியார் கூட்டாண்மை திட்டத்தை செயல்படுத்துவதற்கு அமைச்சரவை ஒப்புதல் பெற்றுள்ளது.
2032 பிரிஸ்பேன் ஒலிம்பிக்கில் இலங்கையை பதக்கம் வெல்லும் நாடாக மாற்றுவதற்கு தனியார் துறை மற்றும் சிவில் சமூகத்தின் ஆதரவுடன் கூட்டு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த கல்வி மற்றும் விளையாட்டு அமைச்சுக்கள் திட்டமிட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
2028 ஆம் ஆண்டு லொஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறவுள்ள ஒலிம்பிக்கில் திறமையான விளையாட்டு வீரர்கள் பங்குபற்றுவதற்கும்இ குறிப்பிடத்தக்க அளவிலான செயல்திறனைப் பெறுவதற்கும் இது வாய்ப்புகளை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த நோக்கங்களை அடைவதற்காகஇ முன்மொழியப்பட்ட வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு கல்வி மற்றும் விளையாட்டு அமைச்சர்களால் முன்வைக்கப்பட்ட கூட்டுப் பிரேரணைக்கு அமைச்சர்கள் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.