நாட்டில் எரிபொருள் நெருக்கடி ஏற்படும் பட்சத்தில் 250 ரூபாவுக்கு எரிபொருளை வழங்க முடியும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் தெரிவித்த கருத்து உண்மைக்குப் புறம்பானது என கோப் குழுவினால் கண்டறியப்பட்டுள்ளது.
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் நேற்றைய தினம் (6) கோப் குழு முன்னிலையில் அழைக்கப்பட்டிருந்தனர்.குறைந்த விலையில் எரிபொருளை விநியோகிக்க முடியும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் தெரிவித்த கருத்து தொடர்பில் கண்டறியும் வகையில் அழைக்கப்பட்டிருந்தனர்.இதன்படி, 250 ரூபாவிற்கு குறைந்த விலையில் எரிபொருள் வழங்க முடியும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்த கருத்து உண்மைக்குப் புறம்பானது என கோப் குழுவினால் கண்டறியப்பட்டுள்ளது.எரிபொருள் விலை தொடர்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மேற்கொண்ட கணக்கீடுகளில் குறைபாடுகள் காணப்படுவதாக கணக்காய்வாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.இந்த நிலையில், பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் தெரிவித்த கருத்து பொய்யானது என மக்களுக்கு அறிவிக்குமாறு கோப் குழுவின் தலைவர் பொதுப்பயன்பாடு ஆணைக்குழுவிற்கு பணிப்புரை விடுத்துள்ளார்.