NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

30 வருடங்கள் உயிர் வாழ்ந்து கின்னஸ் சாதனை படைத்த நாய் !

பொதுவாகவே நாய்களின் ஆயுட்காலம் 10 முதல் 15 வயது வரை தான். ஆனால் போர்ச்சுகல் நாட்டை சேர்ந்த பாபி என்ற பெயரிடப்பட்ட நாய் ஒன்று 30 வருடங்கள் வாழ்ந்து கின்னஸ் சாதனை படைத்துள்ளது.

இதற்கு முன்பு mTஸ்திரேலியாவை சேர்ந்த ஒரு நாய் 29 ஆண்டுகள் மற்றும் 150 நாட்கள் வாழ்ந்தது தான் உலகின் மிக அதிக வயது கொண்ட நாய் என்ற சாதனையை படைத்திருந்தது.

அந்த சாதனையை பாபி முறியடித்துள்ளது. இந்த நாய் வயது முதிர்வு காரணமாக பார்வை குறைபாடு மற்றும் நடப்பதற்கு சிரமப்பட்டாலும், ஆரோக்கியமாக இருப்பதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

Share:

Related Articles