NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

30 லட்சம் குடும்பங்களுக்கு புத்தாண்டுக்கு முன்னதாக 10 கிலோ கிராம் அரிசி வழங்க திட்டம்

ஒரு குடும்பத்திற்கு 10 கிலோ கிராம் வீதம் 30 லட்சம் குடும்பங்களுக்கு அரிசி வழங்க அரசாங்கத்தால் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், இத்திட்டத்தை புத்தாண்டுக்கு முன்னதாக நிறைவேற்றுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளார்.

இந்த அரிசி தொகையை இம்மாதம் 21ம் திகதி மற்றும் மே மாதம் வழங்க திட்டமிடப்பட்டிருப்பதாக நிதி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். மேலும் புத்தாண்டுக்கு முன்னரே வழங்க கூடிய அனைத்து பிரதேசங்களுக்கும் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

Share:

Related Articles