NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

350 சிறைக்கைதிகளுக்கு பொது மன்னிப்பு..!

கைதிகள் தினத்தை முன்னிட்டு பொது மன்னிப்பில் 350 சிறைக்கைதிகள் விடுவிக்கப்படவுள்ளனர்.

ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய பொது மன்னிப்பு வழங்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் பேச்சாளர் காமினி பீ.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அதற்கமைய நாளை (12) , சிறு குற்றங்களுக்குத் தண்டனை அனுபவித்து வரும் 350 கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளனர்.

இதேவேளை, கைதிகளைப் பார்வையிடுவதற்கு இன்றைய தினம் விசேட சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Share:

Related Articles